பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

Dec 07, 2019 11:19 AM 300

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுத்தம் செய்தனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி டிசம்பர் 1ஆம் தேதி முதல், 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வு எங்கும் தூய்மை பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதால், இன்று பெசன்ட் நகர் கடற்கரையை சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையும், சென்னை துறைமுக பொறுப்புக் கழகமும் இணைந்து தூய்மைபடுத்துவதாக கடலோர காவல்படை ஐ.ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார். பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தென்மண்டல டி.ஐ.ஜி. ராஜூ உட்பட, 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted