குன்னூரில் பயிற்சி வகுப்பு முடித்து சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்ட இளம் ராணுவ வீரர்கள்

Dec 22, 2018 07:34 PM 196

குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், ராணுவ பயிற்சியை முடித்த 400 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சியை முடித்த ராணுவ வீரர்கள் 400 பேர் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணுவ வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெலிங்டன் பிரிகேடியர் பங்கஜ் பி ராவ் கமாண்டென்ட் சிறந்த 5 வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

Comment

Successfully posted