நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தும் திட்டமில்லை -ராணுவம்!

Mar 30, 2020 05:29 PM 702

நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாதம் மத்தியில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ராணுவம், இது பொய்யான தகவல் என கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உதவும் வகையில் ராணுவம் மற்றும் NCC, NSS போன்ற அமைப்புகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் வெளியான தகவலில் உண்மையில்லை என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

 

Comment

Successfully posted