ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் பிறந்தநாள் ட்ரீட் இதுதான் ...

Feb 16, 2020 12:01 PM 451

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை டாக்டர் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை ரசிகர்களும் நற்பணிகள் செய்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.ஹீரோ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அயலான், டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comment

Successfully posted

Super User

Eagerly waiting