மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு

Jul 27, 2021 11:35 AM 1878

இந்தியாவில், 132 நாட்களுக்குப் பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக சரிந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 29 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 415 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது.image

42 ஆயிரத்து 363 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். 3 லட்சத்து 98 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 44 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted