வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள்

Sep 25, 2021 07:36 AM 2528

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசிநாள்.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர்,  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 97 ஆயிரத்து 831 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 23ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இந்தநிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாள். இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Comment

Successfully posted