வடபழநி முருகன் கோவில் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தல்

Jan 19, 2022 03:38 PM 1851

சென்னை வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பண்டிகை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத்தையொட்டி நிறைவேற்ற வேண்டிய வேண்டுதல்களை பக்தர்கள் இன்று நிவர்த்தி செய்து வருகின்றனர். இதனிடையே, வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,

அன்றைய தினம் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Comment

Successfully posted