தடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு

Nov 28, 2020 10:42 AM 1461

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியின் தற்போதைய நிலவரம் குறித்து ஜைடஸ் பயோடெக் பார்க் நிறுவனத்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள, ஆய்வகங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு நடத்துகிறார். அகமதாபாத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சங்கோடர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் பயோடெக் பார்க் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜை கோவிட்- டி தடுப்பு மருந்தின், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக இந்த ஆய்வகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் தற்போது எந்த நிலையை எட்டியுள்ளது என விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.

Comment

Successfully posted