வேலூர் தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஆலோசனை

Jul 23, 2019 01:01 PM 97

வேலூர் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவை தேர்தலில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் வேலூரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். தேர்தல் பணி தொடர்பான ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

Comment

Successfully posted