Valentine's day க்கு விக்கி இப்படி ஒரு surprise கொடுப்பார்னு எதிர்பார்க்கல..

Feb 15, 2020 09:34 AM 3073

இயக்குனர் விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் நயன்தாரா,விஜய் சேதுபதியை வைத்து 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதற்குப் பிறகு விக்னேஷ் சிவன் எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை.சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியானது.

தற்போது காதலர் தினமான இன்று ரசிகர்களுக்கு வித்தியாசமான சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார் விக்கி. விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் மீண்டும் ஒரு காமெடி கதையை உருவாக்கி உள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு 'காத்துவாக்குல இரண்டு காதல்' என்று பெயர் வைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் அறிவிப்பை காதலர் தினமான இன்று விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை சமந்தாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தின் முதல் அறிவிப்பை பார்த்த இயக்குனர் அட்லி 'சூப்பர் செம 'என கமெண்ட் செய்துள்ளார்.மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Comment

Successfully posted

Super User

☺☺