மீண்டும் மலையாளப் படத்தில் விஜய் சேதுபதி!

Oct 16, 2020 10:05 PM 1471

விஜய் சேதுபதி அடுத்ததாக நித்யா மேனனுடன் இணைந்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தில் நடிக்க உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், மார்கோனி மத்தாய் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான அவர் மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ளார்.

இந்து வி.எஸ் இயக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். முழு திரைப்படத்தையும் கேரளாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

Comment

Successfully posted