காலாவதியான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிராம மக்கள் முற்றுகை!

Mar 29, 2020 06:24 PM 2067

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டி கிராமத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மளிகை கடையை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராசிபுரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டி கிராமத்தில் நஷிர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அதிகாரி மனோகரன் விரைந்து வந்து கடையில் ஆய்வு மேற்கொண்டார். காலாவதியான 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களைப் பறிமுதல் செய்தார். காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் மளிகைக் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Comment

Successfully posted