தென்தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Dec 01, 2020 09:48 AM 778

தென் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுவடையும் என தெரிவித்தார். இப்புயல் நாளை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறினார்.

இதனால், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழகத்தில் இன்று முதல் 4 ஆம் தேதி வரை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted