சமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன?

Mar 30, 2020 06:16 PM 12105

கடந்த மூன்று நாளாகவே சமுத்திரகனியை கிண்டல் செய்து மீம்கள் சமூகவலைத்தலங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளவாசிகள்.

imageimage
மீம்ஸ் என்றாலே வடிவேலு தான், எல்லா முகபாவனைக்கு செட் ஆகிவிடும்.  என்றாலும் அவ்வபோது வேறு எந்த  ஒரு நடிகரையும் விட்டுவைப்பதில்லை மீம் க்ரியேட்டர்ஸ் இப்பொழுது ட்ரெண்டில் உள்ளார் சமுத்திரகனி.  சமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன?

imageimage
சமுத்திரகனி படங்களில் அவர் அதிகப்படியான அறிவுரை கூறுவார், ஆனால் ட்ரெண்டிங்கில் சமுத்திரகனி இயல்பு மிகவும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.  முன்னதாக சில மீம்ஸ்கள்  சமுத்திரகனியின் சில படங்களை வைத்து கொரோனா தொற்றுக்கு  ஆறுதல் சொல்ல அதை பிடித்துக்கொண்ட சில மீம்க்ரியேட்டர்ஸ் அவரை அதிகப் படியாக கிண்டல் செய்ய துவங்கினர்.

imageimage

இவர்கள் கொடுத்த மீம்ஸ்கள் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அடுத்தபடியாக சமுத்திரகனி  மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். இதனை மீம் க்ரியேட்டர்ஸ் ட்ரெங்டிங் மீம்ஸ் என்று சொல்லுவார்கள் ஒரு டெம்ப்லேட்டை வைத்து பல மீம்ஸ் கிரியேட் பண்ணி ட்ரெண்டிங்கில் விடுவார்கள்! அதுபோல பல நடிகர்கள் மீம்ஸில் சிக்குவதும் உண்டு!  சமுத்திரகனிக்கே தெரியாது ஏன் அவர் ட்ரெண்டிங்கில் உள்ளார் என்று?

 

imageimageகொரோனா தொற்று பரவக்கூடாது  என்பதற்க்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு, இந்த நேரத்தில் இதுதான் விருந்து என்று புகுந்து விளையாடுகிறார்கள் மீம் க்ரியேட்டர்ஸ்! சமுத்திர கனி ரசிகர்கள் சிலர் கோபமும் கொண்டுள்ளனர் இதுபோல் சமுத்திரகனி மட்டும் இல்லாமல் பல நடிகர்களுக்கு நடக்கத்தான் செய்கிறது.  அதை யாரும் மனதில் எடுத்துக்கொள்ளாமல் சிரித்து கடந்து செல்லுவோம் என்பது பலரின் கருத்து!

Comment

Successfully posted