முதலுதவி சிகிச்சை கற்றுக்கொள்வதன் அவசியம் என்ன?

Jul 11, 2019 06:01 PM 118

திடீர் உயிரிழப்புகளை தடுக்க குடும்பத்திற்கு ஒருவர் முதலுதவி சிகிச்சை பயிற்சியை பெறுவது இன்றைய காலக்கட்டத்தில் அவசியம் ஆகிறது. இது குறித்த விழிப்புணர்வு தொகுப்பை காணலாம்...

சாலை பயணம் என்பது இன்றைய சூழலில் பரபரப்பான பயணமாகவும், ஆபத்து நிறைந்ததாகவுமே இருக்கிறது. மனித உயிர்களை பலி வாங்குவதில் முதல் இடம் வகிப்பது பெரும்பாலும் சாலை விபத்துக்கள் தான். உலக அளவில் 30 விநாடிகளுக்கு
ஒருவர் சாலை விபத்தில் இறக்கிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் போது பலரும் அனுதாபம் கொள்கிறார்களே தவிர உதவ முன்வருவதில்லை. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான முதலுதவி சிகிச்சையை அனைவரும் கற்றுக்கொள்வது அவசியம் என்கிறார் முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சியாளறும் அலர்ட் அமைப்பின் நிறுவனருமான கலா பாலசுந்தரம்.

விபத்துகள் என்பது சாலையில் மட்டுமல்ல வீடுகளிலும் நிகழ்கின்றன. திடீர் மயக்கம், குழந்தைகள் பொருட்களை விழுங்கி
விடுதல், தீக்காயங்கள், நெஞ்சு வலி , பாம்பு கடி , நாய்க் கடி அனைத்துமே அவசர ஆபத்துகளே... எனவே வீட்டில் ஒருவராவது இந்த முதலுதவி சகிச்சையை முறையாக கற்றுக்கொள்வது அவசியம் என்கிறார் சமூக ஆர்வலர் ராமசுந்தரம்.

விபத்தில் சிக்கும் பெரும்பாலான உயிர்கள் போதுமான முதலுதவி சிகிச்சைகள் கிடைக்காமலே மரணத்தை தழுவுகின்றன என்பதால், வீட்டிற்கு ஒருவருக்கு, முதலுதவி சிகிச்சை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது...

Comment

Successfully posted