தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பது ஏன்? கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திமுக துணை பொதுச்செயலாளர் திணறல்

Dec 03, 2020 03:32 PM 2629

திண்டுக்கல்லில் திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல்லில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அப்போது பெண் ஒருவர், தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், இவ்வளவு நாட்களாக மக்களின் குறைகளை கேட்டறியாதது ஏன்? எனவும் காட்டமாகக் கேட்டார். அப்போது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் அந்தப் பெண்ணை அமர சொல்லி மைக்கை பிடுங்கினர்.

அந்த பெண்ணின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ஐ.பெரியசாமி செய்வதறியாது திகைத்தார்.

Comment

Successfully posted