முதல் வெற்றியை பதிவு செய்யுமா சன்ரைசர்ஸ் ஐதராபாத்?

Sep 29, 2020 12:54 PM 1385

துபாயில் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை. முன்னதாக விளையாடிய இரண்டு போடிகளிலும் டெல்லி அணி வெற்றிப் பெற்று உத்வேகத்தில் உள்ளது. ஐதராபாத் அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால், இப்போட்டியில் வெற்றிப் பெறும் முனைப்புடன் இருக்கிறது.

டெல்லி அணியை பொறுத்தவரை தவன், ஷா, பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ஸ்டாய்னில் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர், பந்து வீச்சிலும் பலுவாக இருகிறது. ஆனால் ஐதராபாத் அணியை பொருத்த வரை வார்னர், மணிஷ் பாண்டே, போர்ஸ்ட்டோவ் தங்களின் ஆட்டதைச் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆல்ரவுண்டர்கள் ராஷித் கான் மற்றும் நபி ஆகியோர் மிடில் ஆர்டரில் பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. பந்து வீச்சில் புவனேஷ்குமார் மற்றும் நட்ராஜ் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.

இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணி தனது ஹாட்டிரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய ஐதராபாத் அணி தீவிர பயிற்சியில் இருக்கிறது.

Comment

Successfully posted