சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு மையம்

Aug 03, 2018 04:39 PM 640

தேசிய மகளிர் ஆணையமும், தமிழக காவல்துறையும் இணைந்து செயல்படும் இந்த மையத்தை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் திறந்து வைத்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை விசாரிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் அங்கம் வகிப்பார்கள்.  94983 - 36002 என்ற செல்போன் எண் மூலமாக பெண்கள் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

Comment

Successfully posted