உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,23,732 ஆக அதிகரித்துள்ளது!!!

Mar 30, 2020 03:55 PM 415

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பத்து நான்காயிரத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,23,732ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை இரண்டாயிரத்து 489 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,42,000. இத்தாலியில் பலி எண்ணிக்கை 10,700ஐ தாண்டிய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,689 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இதுவரை 3,304 பேர் பலியாகி உள்ள சூழலில், 81,470 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 80,110 பேரும், ஜெர்மனியில் 62,435 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,174 ஆகவும், ஈரானில் 38,309 ஆகவும் அதிகரித்துள்ளது.

Comment

Successfully posted