தஞ்சாவூரில் பட்டப்பகலில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை!

Jun 25, 2020 09:36 PM 669

தஞ்சாவூரில் பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சை காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் திடீரென காரை வழிமறித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த யூசுப் காரை சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி நிறுத்தியுள்ளார். அப்போது காரை விட்டு இறங்கிய யூசுப்பை மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓடஓட வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted