சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே அணிக்கு தடை

Jul 19, 2019 07:43 AM 2428

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது

அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டுக்கு ஐசிசியால் வழங்கப்பட்டு வந்த நிதி முழுவதுமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் ஐசிசி நடத்தும் எந்தவிதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியினால் கலந்து கொள்ள முடியாது. கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் போட்டிகளை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Comment

Successfully posted