கேரளாவில் இந்த சாதனையை படைத்த முதல் படம் பிகில் தான்..

Nov 18, 2019 11:57 AM 2780


அட்லி இயக்கத்தில் விஜய், நயன் தாரா, யோகி பாபு, விவேக் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பிகில் திரைப்படம் அக்டோபர் 25 ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் அப்பா விஜய் , மகன் விஜய் என இரண்டு கதாபாத்திரம்.தான் சாதிக்க முடியாததை foot ball team -ன் coach ஆக மாறி சாதிக்கிறார் மகன் விஜய்.விளையாட்டை சார்ந்த திரைப்படம் என்பதால் இது football lovers-க்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது.படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 300 கோடி வசூல் செய்துள்ளது.அதே போல் கேரளாவில் மட்டும் 20 கோடி வசூலாகியுள்ளது.இதன் மூலம் கேரளாவில் அதிகம் வசூலான தமிழ் திரைப்படம் பிகில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted