ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம்

Feb 20, 2019 10:29 AM 331

ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் ஆர்.கே.பேட்டை தலைமையிடமாகக் கொண்டு புது வட்டம் உருவாக்க வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், பள்ளிப்பட்டு வட்டத்திலிருந்து ஆர்.கே.பேட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஆர்.கே.பேட்டை தலைமையிடமாக கொண்ட புதிய வட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அரி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் திறந்துவைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Comment

Successfully posted