மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத துக்கம் - தன்னை மாய்த்துக்கொண்ட தந்தை

Sep 28, 2020 02:23 PM 694

சென்னை அருகே மனவளர்ச்சி குறைபாடுள்ள மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத தந்தை, தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மதுரவாயலை அடுத்த வானகரம் பகுதியில், தேனீர் கடை நடத்திவந்த ஞானமூர்த்தி என்பவர், தனது மனைவி மற்றும் மனவளர்ச்சி குறைபாடுடைய மகனுடன் வசித்து வந்தார். காலை முதல் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு மாய்த்துக் கொண்டார்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஞானமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், மனவளர்ச்சி குறைபாடுள்ள மகன், தீபாவளிக்கு புத்தாடை கேட்டதாகவும், போதிய வருமானம் இல்லாததால், மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால், ஞானமூர்த்தி தூக்கிட்டு மாய்த்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted