மதுரையில் மருந்து மற்றும் குளிர்பான குடோனில் பயங்கர தீ விபத்து

Mar 29, 2020 03:14 PM 1421

மதுரையில் மருந்து மற்றும் குளிர்பான குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அண்ணாநகர் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவலிங்க சம்ப பிரகாஷுக்கு சொந்தமான குளிர்பானம் மற்றும் மருந்து பொருட்கள் குடோன் உள்ளது. இன்று காலை குடோனில் தரை தளத்தில் இருந்து திடீரென புகை வர தொடங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கடும் புகை மூட்டம் காரணமாக அந்த பகுதியில் வசித்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comment

Successfully posted