பிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா!

Sep 20, 2020 06:48 PM 3714

மிஷ்கின் இயக்கத்தில் நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த பிசாசு படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான சைக்கோ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷாலை வைத்து துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், இருவருக்கும் எற்பட்டப் பிரச்சனையால் படத்தை விட்டுப் பாதிலேயே விலகினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மிக்‌ஷ்ன் அவரது டுவிட்டர் பக்கத்தில் செப்.20ஆம் தேதி பிசாசு-2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

அதுபோல், இன்று பிசாசு-2 படத்தின் பற்றிய அறிவிப்பை, ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. பிசாசு-2 படத்தில் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று ஆண்ட்ரியா ஜெர்மியா நடிக்கிறார். சைக்கோ படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பைப் பெற்ற ராஜ்குமார் பிச்சிமணியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இசையமைப்பாளராக இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

Comment

Successfully posted