2-வது டெஸ்ட் -முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி 

Oct 14, 2018 05:14 PM 681

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அந்த அணி, 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக பந்து வீசிய உமேஷ் யாதவ், 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. கே.எல்.ராகுல் 4 ரன்களுக்கும், புஜாரா 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முதல் டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா, அதிரடியாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி 45 ரன்களுக்கு வெளியேறினார்.

ரகானே - ரிஷப் பந்த் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது நாளான இன்று 367 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டம் இழந்தது. மேற்கு இந்திய தீவுகளை விட இந்திய அணி 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கு இந்திய அணி 2வது இன்னிங்சை நிதானமாக விளையாடி வருகிறது.

Related items

Comment

Successfully posted