அமைச்சரா இருந்தா கொலை மிரட்டல் விடுக்கலாமா?

Aug 03, 2021 08:42 PM 7330

கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய தி.மு.க. அமைச்சர் தா.மோ. அன்பரசனை, பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்கவேண்டும் என, அதிமுக துணை கொறடா ரவி வலியுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புதுகேசவரம் பகுதியில், அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளரும், அதிமுக துணை கொறடாவுமான ரவி கலந்துகொண்டு, உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. வெற்றிபெறவில்லை என்றால், கழுத்தை அறுத்து விடுவேன் என்று, அமைச்சர் தா.மோ. அன்பரசன் அக்கட்சி நிர்வாகிக்கு கெலை மிரட்டல் விடுத்ததை சுட்டிக்காட்டினார்.

இது, திமுக ஆட்சியில் அராஜகம் அரங்கேறி வருவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அமைச்சர் பதவியேற்ற ஒருவர், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசின் அராஜகங்களை மக்களிடம் எடுத்துக்கூறி அதிமுகவினர் வாக்குசேகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted