நீட் தேர்வு எழுதிய மாணவி மாயம்

Sep 18, 2021 08:00 AM 513

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் அருகே சின்ன அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில், மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

image

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் தனிப்படை அமைத்து மாணவியை தேடி வருகின்றனர்.

நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted