மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல் - ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை?

Oct 06, 2020 09:34 AM 756

13-வது ஐ.பி.எல் போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெற மும்பை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தான் அணியும் போராடும் என தெரிகிறது. 

5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மொத்தமாக 4 போட்டிகள் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி என 5 வது இடத்தில் உள்ளது. இன்று நடைப்பெறும் போட்டியில், இரண்டு அணிகள் வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளது.

மும்பை அணியை பொறுத்த வரையில், ரோஹித், ஹர்த்திக், பொல்லார்ட், போல்ட் போன்ற வீரர்கள் இருப்பது அணியின் ரன் விகித்தை அதிகப்படுத்துவதுடன், வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர், ஆர்ச்சர் போன்ற வீரர்கள் இருப்பது பலம். ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. அதை சரி செய்து கொண்டு இந்த போட்டியில் அணிகளுக்கு தேவையான ரன்களை ஸ்கோர் செய்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு அணிகளும் கடைசியாக மோதிக்கொண்ட 5 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் பெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

Comment

Successfully posted