தேசிய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள்!!

Oct 24, 2021 03:07 PM 8068

டெல்லியில் நாளை நடைபெறும் 2019ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விழாவில், தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 7 விருதுகள் வழங்கப்பட உள்ளன.image

imageசிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

image

சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் வழங்கப்படுகிறது.

image

imageசிறந்த இசை அமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி.இமானுக்கும், சிறப்பு திரைப்படத்துக்கான விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கும் வழங்கப்படுகிறது. imageimageசிறந்த ஒலிக்கலவைக்கான விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கும் வழங்கப்பட இருக்கிறது.imageimage

Comment

Successfully posted