அம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி!!

Aug 08, 2020 05:47 PM 801

கோவையில் உள்ள அம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் 286 வது இடம் பிடித்து சாதனை படைத்த மாற்றுத் திறனாளி மாணவி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோவையில் உள்ள அம்மா IAS அகாடமியில் மதுரையை சேர்ந்த கண்பார்வை இழந்த மாணவி பூர்ணசுந்தரி என்பவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த IAS தேர்வில் மாணவி பூர்ணசுந்தரி, தேசிய அளவில் 286 வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அம்மா IAS அகடாடமியின் சேர்மன் எஸ்.பி.அன்பரசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பூர்ணசுந்தரி போன்ற மாணவர்கள் இந்திய அளவில் மிகப்பெரிய பொருப்புகளை அலங்கரிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted