விக்னேஷ் சிவனுடன் அம்மன் கோவிலில் தரிசனம் செய்த நயன்தாரா...

Dec 10, 2019 02:43 PM 1267

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று நேரங்களை செலவிடுவது வழக்கம். சமீபத்தில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நியூயார்க் சென்று இருவரும் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.பின்பு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

தற்போது ஆர்.ஜே பாலாஜி உடன் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

 

இந்நிலையில் நேற்று கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து தரிசனம் செய்துள்ளனர்.இவர்கள் தரிசனம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

Comment

Successfully posted