பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

Sep 29, 2020 10:44 AM 338

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கோதுமை, அரிசி மற்றும் பருப்பு வகைகளை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். அறுவடைக்குப் பின்னர், விவசாயக் கழிவுகளை நிலங்களிலேயே தீயிட்டு கொளுத்துகின்றனர். இதன்காரணமாக காற்றில் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதை முழுமையாக தடை செய்வதை உறுதிப்படுத்த இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Comment

Successfully posted