மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க - மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி ஆலோசனை

Oct 26, 2018 04:04 PM 362

மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் மன்றத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, நிர்வாகிகள் சிலரை நீக்கி நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டார்.

முப்பது - நாற்பது வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ தகுதி ஆகிவிட முடியாது என்றும் காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.  ரஜினியின் இந்த அறிக்கையால் மன்றத்தின் ஆரம்ப கால நிர்வாகிகள் பலரும் அதிருப்தியடைந்திருந்தனர். சிலர் மன்னிப்பு கடிதங்களையும் ரஜினிக்கு அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் மன்றத்தில் சேர்ப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.Related items

Comment

Successfully posted