விராட் கோலி ருத்ரதாண்டவம்; படிக்கல் அதிரடி - ஆர்.சி.பி.க்கு இது 3-வது வெற்றி!

Oct 03, 2020 07:21 PM 1091

13 வது ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூரு இடையேயான ஆட்டம் அபுதாபில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஸ்மித், பட்லர் இணை அணிக்கு தொடக்கத்தைக் கொடுத்தது.

image

3வது ஓவரில் உடானா வீசிய பந்து ஸ்டம்பை தட்ட, ஸ்மித் நடையைக்கட்டினார். தொடர்ந்து பட்லரும், சஞ்சு சாம்சனும் வெளியேற ராபின் உத்தப்பாவும், மஹிபல் லூம்ரர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தப்போராடினர். இருப்பினும் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது ராஜஸ்தான்.

image

பெரிய அளவில் அணியின் வீரர்கள் ரன்களை சேர்ப்பதில் தடுமாறியதால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது அந்த அணி. இதில், ஆர்.சி.பி. தரப்பில், சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், உடானா 2 விக்கெட்டுகளையும், சைனி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆர்.சி.பி. அணிக்கு ஆரோன் பின்ச், படிக்கல் இணை துவக்கம் கொடுத்தது. ஆரோன் பின்ச் வந்த வேகத்தில் வெளியேற, படிக்கலுடன் கைகோர்த்தார் விராட் கோலி. இருவரும் சேர்ந்து, ராஜஸ்தான் பவுலர்களின் பந்துகளை நான்குபுறமும் விரட்டி அடித்து அதிரடிக் காட்டினர். 15 ஓவர் முடிவில் 1விக்கெட்டை மட்டுமே இழந்து 118 ரன்களை சேர்த்தது ஆர்.சி.பி. 45 பந்துகளில் 63 ரன்களுடன் அதிரடிக்காட்டிய படிக்கல்லை ஆர்ச்சர் வெளியேற்ற, ஏ.பி.டிவில்லியர்ஸ் களமிறங்கினார். 19-வது ஓவரின் முதல் பந்திலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்.சி.பி.

Comment

Successfully posted