சினேகாவுக்கு என்ன குழந்தை பிறந்துருக்கு தெரியுமா ?

Jan 24, 2020 05:24 PM 3963

தமிழ் சினிமாவின் சிரிப்பழகி என அழைக்கப்பட்டவர் சினேகா. 2000 ஆம் ஆண்டில் “என்னவளே”படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்பு பல ஹிட் படங்களை கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு விஹான் எனும் மகன் பிறந்தார்.இவர்கள் மூவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் அடிக்கடி வைரலாகும். சமீபத்தில் மீண்டும் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என பிரசன்னா தெரிவித்தார்.

இந்நிலையில் சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்களுக்கு திரைத்துறையினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comment

Successfully posted