15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Sep 18, 2020 04:40 PM 228

தமிழகத்தில், அடுத்த 48 மணி நேரத்திற்கு, 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை பொருத்தவரை லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் 20ம் தேதி வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக, சூறைக்காற்று வீசும் என்பதால், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல்பகுதி, கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Comment

Successfully posted