திருநள்ளாறு - 10 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்

Sep 26, 2020 05:13 PM 738

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் இன்று தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. சனிதோஷம் நீங்குவதற்காக வெளி மாநில, வெளிநாட்டு பக்தர்கள் இங்கு வந்துசெல்வார்கள். கொரோனா காரணமாக இக்கோயிலில் சில மாதங்களாகவே தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், பேருந்துகளும் இயங்குவதால், சனிக்கிழமையான இன்று காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். முகக்கவசம் அணிந்தும், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தும் வழிபட்டனர். இன்று மாலைவரை 10 ஆயிரம் பேர்வரை சாமி தரிசனம் செய்திருப்பார்கள் என்று கோயில் நிர்வாகத் தரப்பில் தெரிவித்தனர்.

Comment

Successfully posted