பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

Sep 17, 2020 10:43 PM 904

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இவ்வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.


➤ 1992 டிசம்பர் 6: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

➤ அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு.

➤ 1992 டிசம்பர் 16: வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி லிபரான் தலைமையில் கமிஷன் அமைப்பு.

➤ 3 மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

➤ 1993 - சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்த 67 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு கையகப்படுத்தியது.

➤ 1993 - அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

➤ 2001 - வழக்கிலிருந்து பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 13 பேர் விடுவிக்கப்பட்டனர்.

➤ 2009 - 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தது.

➤ உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யாண சிங், வாஜ்பாய், அத்வானி மீது புகார்பட்டியல் வாசித்தது.

➤ 2010 -பாஜக தலைவர்களை விடுவித்து பிறப்பித்த உத்தரவை அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

➤ 2012 - அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.

➤ 2017 - வழக்குகள் அனைத்தையும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

➤ 2020 ஜுலை 24 - அத்வானி, முரளி மனோகர் ஜோஷி காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகினர்.

➤ 2020 செப்டம்பர் 16: மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிப்பு. குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

Comment

Successfully posted