அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது!

Sep 18, 2020 01:04 PM 2760

தேர்தல் பணிகள் மற்றும் பொதுக்குழு குறித்து விவாதிக்க அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சென்னை ராயப்பேடையில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், பொதுக்குழு கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் அஇஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் பணிகளுக்கு முன்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அ.இ.அ.தி.மு.கவின் நிர்வாக வசதிக்காக சென்னை மாவட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted