எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு - மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன?

Sep 25, 2020 04:36 PM 2803
திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசிவரை சிகிச்சைபெற்றுவந்த சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் சார்பில் அதன் உதவி இயக்குநர் மருத்துவர் அனுராதா பாஸ்கரன் இன்று மதியம் 1.45 மணிக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். 
 
அதன் விவரம்:
 
“கடந்த ஆகஸ்ட் 5-ல் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிக நிமோனியா பாதிப்பால் அவருக்கு ஆகஸ்ட் 14-லிலிருந்து உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்துறை மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவினர் அவரின் உடல்நிலையை தொடந்து கண்காணித்து வந்தனர். அதையடுத்து, செப். 4 அன்று அவருக்கு கொரோனா தொற்று நீங்கியது, உறுதிசெய்யப்பட்டது. இன்று காலை ஏற்பட்ட திடீப் பின்னடைவால் உச்சபட்ச உயிர்காப்பு சிகிச்சை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மதியம் 1.04 மணிக்கு அவர் இயற்கை எய்தினார்.” என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Comment

Successfully posted