விக்கி-நயனின் தொடரும் கோயில் பயணங்கள்..கல்யாண பிராத்தனையா ?

Dec 18, 2019 12:43 PM 1663

விக்கி- நயன்தாரா சமூக வலைதளங்களில் அனைவராலும் ரசிக்கப்படும் காதல் ஜோடி என்றே கூறலாம்.நயன்தாரா 2019 ஆம் ஆண்டு முன்னணி நடிகர்களான அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படத்திலும் மற்றும் விஜயுடன் பிகில் திரைப்படத்தில் நடித்தார்.இரண்டு திரைப்படங்களுமே blockbuster ஹிட் தான்.

இப்படி முன்னணி ஹீரோக்களுடன் நயன் பிசியாக நடித்து வந்தாலும், தனது காதலருடன் வெளிநாடு சென்று நேரம் செலவிடுவதை தவிர்ப்பதில்லை. வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்ட இவர்கள் தற்போது இருவரும் ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ளனர்.

image

சமீபத்தில் திருச்செந்தூர் கோயில் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.தற்போது நாகர்கோயிலில் இருக்கும் அய்யாவழி கோயில்,சுசீந்திரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

image

இவர்களின் இந்த தொடரும் கோயில் பயணங்களுக்கு காரணம் என்ன ?என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த பயணம் முடிந்த பிறகு ஆர்.ஜே .பாலாஜியுடன் நடிக்கவிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted