மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அப்போலோ நிர்வாகத்திடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணைத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இயல்பாக இருதரப்பையும் விசாரித்து கொண்டிருக்கும் போதே, ஆணையம் தங்களுக்கு எதிராக செயல்படுவது போல அப்பல்லோ நினைத்து கொண்டு வழக்கு தொடர்வது அதன் முதிர்ச்சியற்ற தன்மையை பிரதிபலிப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.