தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகா புயல் குஜராத் கடற்கரையை நோக்கி செல்வதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.