தமிழகத்தில் 2016ம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால், இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி, இந்த வறட்சியை எதிர்கொள்ளவும், மழைநீரை சேமித்து, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், 2017ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை அறிமுகம் செய்தார்.