டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70வது நாளை எட்டியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை போல மீண்டும் ஒர் வன்முறை சம்பவம் நடக்காத வகையில், டெல்லி எல்லைகளில் ஆறு கட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், ஹாலிவுட் திரை பிரபலங்களின் பதிவுகளால், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. எப்போதும் இல்லாத விதமாக ஒரு பிரபலத்தின் ட்விட்டர் பதிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகமே பதிலளித்துள்ளது.