நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்தியக் குழு கடந்த 5ம் தேதி தமிழகம் வந்தடைந்தது. இதனையடுத்து, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்தது.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
நிவர் புயல் கடந்த வியாழக்கிழமை அதிகாலை புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. புயலால் அதிகம் பாதித்த மாவட்டமான கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.