சந்திரசேகர் ஆஸாத் கைது நடவடிக்கை குறித்து பேசிய ஹைதராபாத் காவல் துறையினர், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கச் சென்றதால் ஆசாத் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
பெங்களூருவில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க க்யூ பிரிவு காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் 15 நாட்களுக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் தன் குழந்தையுடன் சேர்ந்தார்.