கொரோனா பரவல் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் அமெரிக்க கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கப்பல்களில் சிக்கியிருக்கும், கனடா மற்றும் பிரிட்டனை சேர்ந்த பயணிகளை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.